பீரங்கி மூக்கனே போற்றி!


“சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பைத் தரவல்லது டி.எஸ். பட்டணம் பொடி. தையல்கார முருகன், ஆட்டோ ஓட்டும் ஆறுமுகம் ஆகியோர் விரும்பிப் பயன்படுத்தும் பொடி டி.எஸ். பட்டணம் பொடி”

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது இந்த விளம்பரம் காதில் அலறியது.  உடனே எனக்கு சுழியர் தாத்தா ஞாபகம் வந்துவிட்டது. (சிலருக்கு பாக்கியம் ராமசாமியின், ‘அப்புசாமி’ நினைவுக்கு வரலாம்)

ரஜினி ஸ்டைல் தாத்தா

‘படையப்பா’வில் ரஜினி மௌத் ஆர்கனை எடுப்பாரே, அதேபோல பெல்ட்டில் இருந்து பொடி மட்டையை எடுத்து, லாவகமாகப் பிரிப்பார் சுழியர் தாத்தா. பரதநாட்டியம் ஆடுவதற்கு முத்திரை பிடிப்பது போல விரல்களைச் சேர்த்து பொடியை எடுப்பார்.

x