ஊழல் தடுப்பா, திசை திருப்பலா?


ஊழல் தடுப்பா, திசை திருப்பலா?

விதிகளை மீறி ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற ஊடக நிறுவனம் ரூ.305 கோடி மதிப்பிலான அந்நிய முதலீட்டைப் பெறவும், அது தொடர்பான விசாரணையிலிருந்து தப்பிக்கவும் உதவினார் என்பது கார்த்தியின் மீதான குற்றச்சாட்டு.

அதற்கு நிதியமைச்சரின் மகன் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்றும், பிரதிபலனாக அந்நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்கினார் என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

மகளைக் கொன்ற குற்றத்துக்காக, தற்போது சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் கடந்த மே மாதம் கார்த்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது சிபிஐ. அவரது வீட்டிலும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் கார்த்தியின் மீது வழக்கு பதிவுசெய்தது. அதைத் தொடர்ந்து, கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைதுசெய்யப்பட்டார்.

x