தேசிய செஸ் போட்டியில் தமிழக வீரர் இனியனுக்கு தங்கம்; ஈரோட்டில் வரவேற்பு


ஜார்க்கண்டில் நடந்த தேசிய செஸ் போட்டியில், தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் தங்கப்பதக்கம் வென்றார்.

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் கடந்த 20ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை தேசிய அளவிலான செஸ் போட்டி (ராபிட்) நடந்தது. இப்போட் டிகளில் 11 கிராண்ட் மாஸ்டர்கள், 24 இன்டர் நேஷனல் மாஸ்டர்கள் உட்பட 308 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மொத்தம், 11 சுற்றுகளாக நடைபெ ற்ற இப்போட்டியில் 7 சுற்றுகளில் வெற்றி, 4 டிரா என 9 புள்ளிகளுடன் கிராண்ட் மாஸ்டர் இனியன் முதலிடத்தை சமன் செய்தார்.

மற்றொரு தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ், ரயில்வே வீரர்கள் கிராண்ட் மாஸ்டர் ஷ்யாம் நிகில், கிராண்ட் மாஸ்டர் திப்தயான் கோஷ் ஆகியோர் 9 புள்ளிகள் பெற்றனர். அதனை தொடர்ந்து டை பிரேக் முறையில் தமிழக வீரர் இனியன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

பிரனேஷ் வெள்ளிப்பதக்கமும், ஷ்யாம் வெண்கல பதக்கமும் வென்றனர்.இப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள கிராண்ட் மாஸ்டர் இனியன் ஈரோட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

x