நியூஸி.க்கு அதிர்ச்சி கொடுத்த நைஜீரியா!


கோலாலம்பூர்: 19-வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘சி’ பிரிவில் நியூஸிலாந்து - நைஜீரியா அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 13 ஓவர்களை கொண்டதாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த நைஜீரியா 13 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லக்கி பைட்டி 19, லிலியன் உத் 18 ரன்கள் சேர்த்தனர்.

66 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 12 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது. லிலியன் உத் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் நியூஸிலாந்து அணியால் 6 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. முடிவில் நியூஸிலாந்து அணியால் 6 விக்கெட்கள் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகளுக்கு பெயர்பெற்றது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே போன்று அங்கு கிரிக்கெட்டுக்கு அதிக அளவிலான வரவேற்பு கிடையாது. இருப்பினும் ஐசிசி-யின் அறிமுக தொடரிலேயே நைஜீரியா, முழு உறுப்பினரான நியூஸிலாந்து அணியை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது

x