இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு டென்னிஸ் வீராங்கனையுடன் திருமணம்: குவியும் வாழ்த்துகள்


இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு, டென்னிஸ் வீராங்கனை ஹிமானியுடன் திருமணம் நடந்துள்ள நிலையில், திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. புதுமண ஜோடிக்கு பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மணமகள் ஹிமானி மோர் தற்போது அமெரிக்காவில் முதுகலை பட்டம் படித்து வருகிறார்.

சக விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என நீரஜ் சோப்ராவுக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் லூசியானா பல்கலைக் கழகத்தில் பயின்ற ஹிமானி மோர், பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர டென்னிஸ் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

x