நார்வே செஸ் போட்டி: ஹம்பி பங்கேற்பு


ஸ்டாவஞ்சர்: நார்வேயில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள நார்வே மகளிர் செஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி பங்கேற்கவுள்ளார்.

தற்போதைய உலக ரேபிட் செஸ் போட்டி சாம்பியனான கோனேரு ஹம்பி, மகளிர் கிளாசிக்கல் செஸ் பிரிவில் உலக அளவில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளார்.

2002-ல் கிராண்ட்மாஸ்டர் தகுதியை அடைந்தபோது இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை ஹம்பி படைத்திருந்தார்.

உலக ரேபிட் செஸ் போட்டியில் 2019, 2024 ஆகிய 2 ஆண்டுகளில் பட்டம் வென்றவர் ஹம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

x