ஹாக்கியில் தமிழக அணிக்கு 5-வது வெற்றி


ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக்கில் ஆடவருக்கான போட்டிகள் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தனது 6-வது ஆட்டத்தில் டெல்லி எஸ்ஜி பைப்பர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு டிராகன்ஸ் அணி சார்பில் 6-வது நிமிடத்தில் ஜிப் ஜான்சனும், 19-வது நிமிடத்தில் நேத்தன் எப்ராம்ஸும், 21-வது நிமிடத்தில் பிளேக் கோவர்ஸும் கோல் அடித்து அசத்தினர். டெல்லி எஸ்ஜி பைப்பர்ஸ் அணி தரப்பில் 2-வது நிமிடத்தில் தாமஸ் டொமீன் 2-வது நிமிடத்திலும், 37-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்.

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் 15 புள்ளிகளுடன் தமிழ்நாடு டிராகன்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழ்நாடு டிராகன்ஸ் தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 18-ம் தேதி ஹைதராபாத் டூஃபேன்ஸ் அணியுடன் மோதுகிறது.

x