புதுடெல்லி: இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2024ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளைப் பெறுபவர்களை அறிவித்துள்ளது. அதன்படி, துப்பாக்கி சுடும் வீரர் மனு பாக்கர், சதுரங்க வீரர் குகேஷ், ஹாக்கி நட்சத்திரம் ஹர்மன் பிரீத் சிங் மற்றும் பாரா-தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோர் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 17, 2025 அன்று ராஷ்டிரபதி பவனில் காலை 11 மணிக்குத் தொடங்கும் விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் வீரர்களுக்கு விருதினை வழங்க உள்ளார்.
அதேபோல், 2024ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் பெறும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தடகள பிரிவு: ஜோதி யர்ராஜி, அன்னு ராணி,
குத்துச்சண்டை பிரிவு: நிது, சாவீட்டி
சதுரங்கம் பிரிவு: வந்திகா அகர்வால்
ஹாக்கி பிரிவு: சலிமா டெட், அபிஷேக், சஞ்சய், ஜர்மன்ப்ரீத் சிங், சுக்ஜீத் சிங்
பாரா-வில்வித்தை பிரிவு: ஸ்ரீ ராகேஷ் குமார்,
பாரா தடகளம் பிரிவு: ப்ரீத்தி பால், ஜீவன்ஜி தீப்தி, அஜீத் சிங், சச்சின் சர்ஜராவ் கிலாரி, தரம்பிர், பிரணவ் சூர்மா, எச் ஹோகடோ செமா, சிம்ரன், நவ்தீப்
பாரா-பேட்மிண்டன் பிரிவு: நித்தேஷ் குமார், துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ்,
பாரா-ஜூடோ பிரிவு: கபில் பர்மர்
பாரா-ஷூட்டிங் பிரிவு: மோனா அகர்வால், ரூபினா பிரான்சிஸ்
ஷூட்டிங் பிரிவு: ஸ்வப்னில் சுரேஷ் குசலே, சரப்ஜோத் சிங் ஸ்குவாஷ், அபய் சிங்
நீச்சல் பிரிவு: சஜன் பிரகாஷ்
மல்யுத்தம் பிரிவு: அமன்
உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படவுள்ளது. 2024 விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த செயல்பாட்டிற்காக அர்ஜுனா விருதுகள் வாழ்நாள் சாதனையாளர் விருது. தடகளம் பிரிவில் சுச்சா சிங், பாரா-நீச்சல் பிரிவில் முரளிகாந்த் ராஜாராம் பெட்கர் அகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது 2024 அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி வழக்கமான பட்டியலில்;
பாரா-ஷூட்டிங் பிரிவு: சுபாஷ் ராணா
ஷூட்டிங் பிரிவு: தீபாலி தேஷ்பாண்டே
ஹாக்கி பிரிவு: சந்தீப் சங்வான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், துரோணாச்சார்யா வாழ்நாள் சாதனையாருக்கான விருதில் பேட்மிண்டன் பிரிவில் எஸ் முரளிதரன்
கால்பந்து பிரிவில் அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், 2024ம் ஆண்டுக்கான ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருது இந்திய உடற்கல்வி அறக்கட்டளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
2024ம் ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் (MAKA) டிராபி, விளையாட்டில் சிறந்து விளங்கும் பல்கலைக் கழகங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சண்டிகர் பல்கலைக்கழகம் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது. முறையே பஞ்சாப் லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி இரண்டாம் இடமும், அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.