அஸ்வினின் சாதனையை சமன் செய்தார் பும்ரா!


துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை சமன் செய்தார்.

கிரிக்கெட் வீரர்களின் தரவரிசையை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதில் பும்ரா மொத்தம் 904 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2016-ம் ஆண்டில் அஸ்வின் மட்டுமே 904 புள்ளிகள் பெற்றிருந்தார். அந்த சாதனையை தற்போது பும்ரா
சமன் செய்துள்ளார். இந்திய பந்துவீச்சாளர்கள் ஐசிசி தரவரிசையில் பெற்ற அதிகபட்ச புள்ளிகளே 904 என்பது குறிப்பிடத்தக்கது.

x