வலைப்பயிற்சியில் ஆகாஷ்தீப் காயம்


மெல்பர்ன்: வலைப்பயிற்சியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி மெல்பர்னில் தொடங்கவுள்ளது. இதையடுத்து இந்திய அணியினர் மெல்பர்ன் மைதானத்தில் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரோஹித் சர்மா இடது முழங்காலில் லேசான காயமடைந்தார். அதைப்போலவே ஆகாஷ் தீப்புக்கும் கையில் லேசான காயம் ஏற்பட்டது. இருந்தபோதும் காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு ரோஹித் சர்மா தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இருவருக்கும் பெரிய அளவில் காயம் இல்லை என்றும், அவர்கள் மெல்பர்ன் போட்டியில் விளையாடுவார்கள் என்றும் இந்திய அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

x