அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகல்


அடிலெய்டு: இந்தியா​வுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்​பந்து வீச்​சாளர் ஜோஷ் ஹேசில்​வுட் விலகி​யுள்​ளார்.

இந்திய அணிக்கு எதிரானபெர்த் டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்டிருந்​தது. இதனால் 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 0-1 என பின்​தங்​கி​யுள்​ளது. இரு அணிகளும் வரும் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் 2-வது டெஸ்ட் போட்​டி​யில் மோத உள்ளன. இந்த போட்டி பகலிரவாக நடத்​தப்​படு​கிறது. இந்நிலை​யில் இந்த போட்​டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து முன்னணி வேகப்​பந்து வீச்​சாளரான ஜோஷ் ஹேசில்​வுட் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு இடது இடுப்பு பகுதி​யில் காயம் ஏற்பட்​டுள்ள​தால் விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்
​கெட் வாரியம் தெரி​வித்​துள்ளது.

அணியில் சீன் அபோட்: அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியில் சீன் அபோட், பிரண்டன் டாக்​கெட் ஆகிய இரு வேகப்​பந்து வீச்​சாளர்கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். 33 வயதான ஜோஷ் ஹேசில்​வுட் பிங்க் பந்து டெஸ்ட் போட்​டி​யில் சிறப்பாக செயல்​படக்​கூடிய​வர். சொந்த மண்ணில் இந்தியா​வுக்கு எ​திரான டெஸ்ட் ​போட்​டி​யில் ஜோஷ் ஹேசில்​வுட் ​விளை​யாடா​மல் இருப்பது இதுவே ​முதன்​முறை​யாகும்​.

x