வடநெம்மேலியில் பீச் வாலிபால் போட்டி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கிவைத்தார்


​மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்​மேலி​யில் பீச் வாலிபால் போட்​டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று தொடங்​கி வைத்​தார்​.

மாமல்லபுரம்: ​மாமல்​லபுரத்தை அடுத்த வட நெம்​மேலி​யில் பீச் வாலிபால் போட்​டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். தமிழகத்​தில் 13 ஆண்டு​களுக்​குப் பிறகு, சர்வதேச பீச் வாலிபால் போட்டி, செங்​கை மாவட்டம், மாமல்​லபுரத்தை அடுத்த வடநெம்​மேலி​ - தனியார் ரிசார்ட்​டையொட்டி உள்ள கடற்​கரை​யில் நேற்று தொடங்​கியது.

இப்போட்டி 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், 42 நாடு​களைச் சேர்ந்த ஆண்கள் பிரி​வில் 24 அணிகள், பெண்கள் பிரி​வில் 24 அணிகள் என மொத்தம் 48 அணிகள் கலந்து கொள்​கின்றன. இதில், 150-க்​கும் மேற்​பட்ட வீரர், வீராங்​கனைகள் பங்கேற்​கின்​றனர்.

இந்நிலை​யில், தமிழ்​நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் மேற்​கண்ட நிகழ்ச்​சி​யில் பங்கேற்ற வீரர், வீராங்​கனைகளை அறிமுகப்படுத்தி போட்​டியை தொடங்கி வைத்​தார். இந்நிகழ்ச்​சி​யில் அமைச்​சர்கள் தா.மோ. அன்பரசன், டிஆர்பி ராஜா, தமிழ்​நாடு வாலிபால் அசோசி​யேஷன் தலைவர் தெய்​வசி​காமணி, காஞ்​சிபுரம் எம்.பி. செல்​வம், திருப்​போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, ஓய்வு​பெற்ற டிஜிபிகள் தேவாரம், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: தமிழ்​நாடு விளை​யாட்​டில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்​நாடு அரசு விளை​யாட்டுக்கு முக்​கி​யத்துவம் கொடுக்​கிறது. 2022-ம் ஆண்டு சர்வதேச 44-வது சதுரங்க போட்டி, சர்வதேச சர்பிங் போட்டி, சைக்​கிளோத்​தான் போட்டி உள்ளிட்ட போட்​டிகளை நடத்தி தமிழக அரசு சாதனை படைத்​துள்ளது.

சர்வதேச விளை​யாட்டு நகரமாக தமிழ்​நாடு ​மாறும். அனைத்து, போட்​டிகளையும் நடத்​தும் இடமாக கிழக்கு கடற்கரை சாலை ​மாறி உள்​ளது. இவ்வாறு அவர் கூறினார்​.

x