சென்னை: உலக கேரம் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சென்னை வீராங்கனை காசிமா 3 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் காசிமா (17) உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் காசிமா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் அவர் 3 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.
இவர் சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஆவார். இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த காசிமா, நாகஜோதி, மித்ரா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.
முதல்வர் வாழ்த்து: இந்நிலையில் தங்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.