ஆசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்றார் காஞ்சிபுரம் மாணவி


காஞ்சிபுரம் மாணவி நீனா

காஞ்சிபுரம்: கம்போடியா நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான குத்துச் சண்டை போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நீனா ஒரு தங்கமும், இரு வெள்ளிப் பதக்கங்களும் பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் புத்தேரி பெரிய மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் நீனா (21). காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த அக்.6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வாக்கோ அமைப்பு நடத்திய ஆசியன் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்றார்.

கம்போடியாவில் பெனோம் பென் நகரத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 22 நாடுகளைச் சேர்ந்த 800 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து 5 பேர் உட்பட இந்தியா முழுவதுமிருந்து 45 பேர் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கேற்றனர்.

2 வெள்ளிப் பதக்கம்: இப்போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி நீனா 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம், மேலும் இரு பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

x