கோவை: அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி கோவையில் நாளை தொடங்குகிறது.
இதுகுறித்து கோவை மின்வாரிய அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நடத்தும் அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 3ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில், கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் கொ.குப்புராணி வரவேற்புரை வழங்குகிறார்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின், காவல் பிரிவு தலைவர் பிரமோத் குமார் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் இயக்குநர், பகிர்மானம் (பொறுப்பு) கு. இந்திராணி, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் இயக்குநர். உற்பத்தி (பொறுப்பு) கனி கண்ணன், மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் இயக்குநர் (நிதி) சுந்தரவதனம் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.
போட்டிகள் முடிவுற்று பரிசளிப்பு விழா அக்டோபர் 5ம் தேதி மாலை 5 மணியளவில் கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும். மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி இதில் பங்கேற்று பரிசுகளை வழங்கவிருக்கிறார்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.