டி20 உலககோப்பை கிரிக்கெட் அணியில் 2 கருப்பின வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற இடஒதுக்கீடு கொள்கையை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மீறியுள்ளதால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கருப்பின மக்கள் அதிகமாக வாழும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி காரணமாக கருப்பின வீரர்களுக்கு கிரிக்கெட் அணியில் இடம்பெற பல தடைகள் இருந்தது. இதை எதிர்த்து நெல்சன் மண்டேலா போன்ற பல தலைவர்களின் எழுச்சி குரலால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் கருப்பின வீரர்களுக்காக இட ஒதுக்கீடு கொள்கை வகுக்கப்பட்டது. இதன்படி, அணியில் வெள்ளையர் அல்லாத ஆறு பேர் இடம்பெற வேண்டும். இதில் இரண்டு பேர் கருப்பின வீரர்களாக இருக்க வேண்டும் என்று வகுக்கப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் வெளியானது. இதில், வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவை, தவிர வேறு எந்த கருப்பின வீரரும் அணியில் இடம்பெறவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, கருப்பின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு பேர் கருப்பின வீரர்கள் இருக்க வேண்டும் என்ற விதியை மீறி ரபாடாவை மட்டும் சேர்த்து மற்ற ஐந்து பேர் வெள்ளையர்கள் இல்லாத வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அதில் ரீசா ஹென்ரிக்ஸ், பீஜான் பார்ட்டீன், கேசவ் மகராஜ், தப்ரைஸ் சாம்சி மற்றும் ஒட்டனில் பார்ட்மேன் ஆகிய வீரர்கள் டி20 உலக கோப்பை அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விதியை மீறிய தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் மீது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து கருத்து கூறிய முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் பிக்லீ மாம்பூலா, "ஒரே ஒரு கருப்பினர் வீரருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கியிருப்பது மிகவும். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி சமூக அளவில் முன்னேறி செல்ல வேண்டுமே தவிர பின்னோக்கி செல்லக்கூடாது" என்று அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த தென்னாப்பிரிக்கனி பயிற்சியாளர் வால்டர், "லுங்கி கிடி என்ற கருப்பின வீரர் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மெயின் அணியில் இடம்பெறவில்லை" என்றும் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!
ஓடுபாதையில் விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!
கையில் கட்டுடன், கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!
பெரும்பான்மை கிடைக்கலைன்னா பாஜகவின் ‘பிளான் பி’ என்ன? - அமித் ஷா அட்டகாச பதில்!
அஞ்சலி கொலையில் திடீர் திருப்பம்... ஓடும் ரயிலிலிருந்து குதித்த குற்றவாளி!