அர்ஜுனா விருது வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி குத்துச்சண்டை வீராங்கனை நீத்கு காங்காஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, இந்தியா சார்பில் தங்கப் பதக்கம் வென்றவர் நீத்து காங்காஸ். ஹரியாணா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2023-ம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இதையடுத்து சமீபத்தில் அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, தனக்கும் விருது கிடைக்கும் என நீத்து நம்பிக்கையுடன் காத்திருந்தார்.
ஆனால் அவரது பெயர், அர்ஜுனா விருது பெற்றோர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதையடுத்து அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவின் படி தனக்கு அர்ஜுனா விருது வழங்க மத்திய அரசு பரிசீலிக்கக்கோரி அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர நீத்துவுக்கு அர்ஜுனா விருது வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்யும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி நீனா பஞ்சால் கிருஷ்ணா அறிவித்தார். பிவானி பாக்சிங் கிளப்பின் நிறுவனரான குத்துச்சண்டை பயிற்சியாளர் ஜெகதீஸ் சிங் நீத்துவிடும் திறமைகள் இருப்பதைக் கண்டு கொண்டார். இவர் முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கின் பயிற்சியாளர் ஆவார்.
முதல் முறையாக 2022-ம் ஆண்டு பல்கேரியாவில் நடைபெற்ற ஸ்டிராண்ட்ஜா நினைவு பாக்சிங் தொடரில், 48 கிலோ எடை பிரிவில் நீத்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். தற்போது 23 வயதாகும் நீத்து, உலக சாம்பியன்ஷிப் பட்டம் என்ற 6வது இந்தியர் என்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
2024-ல் தேர்தலைச் சந்திக்கும் 40 நாடுகள்... இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் எத்தனை முக்கியம்?
புத்தாண்டு பரிசு... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!