ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கார்த்திக் குமார் மற்றும் குல்வீர் சிங் ஆகியோர் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கார்த்திக் குமார் வெள்ளியும், குல்வீர் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.
வெள்ளி பதக்கம் வென்ற கார்த்திக் குமார் 10 ஆயிரம் மீட்டர் இலக்கினை 28.15.38 நிமிடங்களிலும் வெண்கலம் வென்ற குல்வீர் சிங் 10 ஆயிரம் மீட்டர் இலக்கினை 28.17.21 நிமிடத்திலும் அடுத்தடுத்து எட்டி இந்தியாவுக்கு பதக்கங்களை உறுதி செய்தனர்.