100 மீட்டருக்கு சிக்ஸர் அடித்தால் 10 ரன்கள் கொடுங்கள் - ரோகித் சர்மாவின் புதிய கோரிக்கை!


ரோகித் சர்மா

கிரிக்கெட்டில் சிக்ஸர்கள்தான் ரசிகர்களுக்கு உற்சாகம், அப்படி அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு 6 ரன்கள் வழங்கப்படுகிறது. ஆனால் சிக்ஸர் மாஸ்டர் ரோகித் சர்மா, இதற்கு கூடுதல் ரன்கள் வழங்கும் விதியை சேர்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

“பேட்ஸ்மேன்கள் 90 மீட்டர் சிக்ஸர் அடித்தால் 8 ரன்களும், 100 மீட்டர் சிக்ஸர் அடித்தால் 10 ரன்களும் என நிர்ணயித்தால் கிரிக்கெட் மேலும் ரசனைக்குரியதாக இருக்கும்” என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அந்த விதியை சர்வதேச கிரிக்கெட்டில் கொண்டு வர வேண்டும் என்கிறார் ரோகித் சர்மா. இவர் இதை விமல் குமாரின் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

முன்னதாக, அவரிடம் ஒரு விதியை கிரிக்கெட்டில் சேர்க்க வேண்டும் என்றால் எதை சேர்க்க விரும்புகிறீர்கள் என அந்த யூடியூபர் கேட்டதற்கு அவர் இவ்வாறு பதில் கொடுத்தார்.

கிறிஸ் கெயில், பிராண்டன் மெக்கலம், ரோகித் சர்மா போன்ற வீரர்கள் மைதானத்திற்கு வெளியே பந்தை பறக்க விடும் ஆற்றல் கொண்டவர்கள். வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 553 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 551 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே ரூ.1000 உரிமைத் தொகை கேட்ட பெண்கள்!

சென்னையில் பரபரப்பு... அடுத்தடுத்து மயங்கி விழுந்த 17 ஆசிரியர்கள்!

x