இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வழங்கப்படும் உணவுகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் ஒரு வாரத்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில்
அக்டோபர் 5-ம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. அதனை தொடர்ந்து நவம்பர் 19-ம் தேதி இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடருக்காக தகுதியடைந்து பங்கேற்றுள்ள 10 அணிகளும் தற்போது இந்தியா வந்தடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு சில பயிற்சி போட்டிகளுக்கு பிறகு அனைத்து அணிகளும் லீக் சுற்று போட்டிகளில் விளையாட இருக்கின்றன.
இந்நிலையில் முன்கூட்டியே இந்தியா வந்துள்ள அனைத்து அணிகளுக்கும் அவர்களது உணவு முறைக்கு ஏற்றார் போல் உணவுத் திட்டத்தை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் ஹைதராபாத் வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் அவர்களது உணவு கட்டுப்பாடுகள் குறித்த விவரங்கள் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த உணவுத்திட்டத்தின்படி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி மட்டுமின்றி 10 அணி வீரர்களுக்கும் மாட்டு இறைச்சி வழங்கப்படமாட்டாது. அதை தவிர்த்து சிக்கன், மட்டன், மீன் என அனைத்து வகையான இறைச்சிகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு வீரர்களுக்கு தேவைப்படும் அளவிற்கு சத்தான உணவு வகைகள் அனைத்தும் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதில் தானிய வகை, அரிசி வகை, மாவு பொருட்கள் மற்றும் புரதம் நிறைந்த பொருட்கள் என மற்ற எந்த உணவுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. அதேபோன்று சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பட்டர் சிக்கன் என இந்திய பாரம்பரிய வகை உணவுகள் அனைத்தும் அனைத்து வீரர்களுக்கும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே ரூ.1000 உரிமைத் தொகை கேட்ட பெண்கள்!
சென்னையில் பரபரப்பு... அடுத்தடுத்து மயங்கி விழுந்த 17 ஆசிரியர்கள்!