ஆசிய விளையாட்டுப் போட்டி.. துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி!


தங்கம் வென்ற இந்திய வீரர்கள்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்களின் பதக்கவேட்டை தொடரும் நிலையில் இன்று மேலும் ஒரு தங்கம், வெள்ளி கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலை 26 ஆக உயர்த்தியுள்ளது.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய ஆடவர் அணி சார்பில் மூன்று நிலைகள் கொண்ட ஐம்பது மீட்டர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

அதேபோல 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியா மகளிர் பிரிவினருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஈஷா, திவ்யா, பாலக் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி இந்த வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு மகளிர் பிரிவினர் முன்னேறியுள்ளனர்.

வெள்ளி வென்ற மகளிர் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இதுவரை 14 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அதன் மூலம் சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி, 10 வெங்கலம் உட்பட 26 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.

டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தடகளப் போட்டிகள் இன்று தொடங்க இருப்பதால் அதிலும் இந்தியாவிற்கு பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

x