இந்தியா சாதனை... 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அபாரம்!


தங்கம் வென்ற இந்திய அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங், மனு பாக்கர், ரிதம் சங்வான் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றனர்

துப்பாக்கிச்சுடும் போட்டி

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் 4-ம் நாள் சீனாவில் உள்ள ஹாங்சோவில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் டீம் போட்டியில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் எதிரணியினரைத் திகைக்க வைத்து, தங்கம் வென்றனர். பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் போட்டியில் மனு பாக்கர் முதலிடம் பெற்றார், ஈஷா ஐந்தாவது இடத்தையும் ரிதம் ஏழாவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

x