ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா? - நாளை 3வது ஒருநாள் போட்டி!


இந்தியா ஆஸ்திரேலியா

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இரு அணிகளும் வெற்றிக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதிய முதல் ஒரு நாள் போட்டி கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றியாவது பெரும் முயற்சியில் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு நாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, இந்த முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த தொடரை வொயிட் வாஷ் செய்யும் முயற்சியில் இறங்கும் என்பதால், இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

x