மொகாலியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை!


இந்தியா - ஆஸ்திரேலியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி,மொகாலியில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று மொகாலியிலும், 2-வது போட்டி 24-ம் தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 27-ம் தேதி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் மொகாலியில் இன்று நடைபெற உள்ளது.

கே.எல் ராகுல்

முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் அணியை வழிநடத்த இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா துணைக்கேப்டனாக செயல்பட இருக்கிறார். ருதுராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வலு சேர்க்க இருக்கின்றனர். வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, பும்ரா, அஸ்வின் என வலுவான அணியாக இந்தியா திகழ்கிறது.

அதே நேரம் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியிலும் இளம் வீரர்கள் உள்ளதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

x