ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்.
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளன. மொத்தம் உள்ள 77 பேருக்கான வாய்ப்பிற்கு 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் என 333 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸூக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 20 கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளார். இவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. இதன் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை கம்மின்ஸ் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்தன் மூலம் அவர் இந்த உச்சத்தை தொட்டுள்ளார். இவருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் சாம் கரன் ரூபாய் 18 கோடியே 50 லட்சத்துக்கு அதிகப்படியான விலைக்கு வாங்கப்பட்ட வீரராக இருந்தார். இந்நிலையில், ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ள பேட் கம்மின்ஸ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்
இதையும் வாசிக்கலாமே...
இன்றும் 49 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்திலிருந்து இதுவரை 141 பேர் வெளியேற்றம்
விவாகரத்து ஆனதும் மகனைத் தத்துக் கொடுத்த சின்னத்திரை நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!
கலக்கல் வீடியோ... விஜய் பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட தேவதர்ஷினி!
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா... சிறப்பு ஏற்பாடுகள் தயார்!
ஷாக்... தேநீர் கொண்டு வர தாமதம்: மனைவியின் தலையைத் துண்டித்து கொலை செய்த கொடூர கணவர்!