அசத்தல்... டைமண்ட் லீக் தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!


நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஜக்குப் வட்லெஜ்ச் 84.24 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். பின்லாந்தின் ஆலிவர் ஹெலண்டர் 83.74 மீட்டர் தூரம் எறிந்து 3ஆம் இடம் பிடித்தார்.

x