2வது டி20 போட்டி: இந்தியா பேட்டிங்... தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு


இந்தியா- தென்னாப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. கனமழை காரணமாக முதல் போட்டி டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டி இன்று செயின்ட் ஜார்ஜ்ஸ் பூங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.

சூர்யகுமார் யாதவ்

போட்டி துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரையிலும் மிதமான மழை பெய்து வந்ததால் 2வது போட்டியும் ரத்து செய்யப்படுமா என ரசிகர்களிடையே ஏமாற்றம் நிலவியது. இருப்பினும் மழை சற்றே ஓய்ந்ததால் தற்போது டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல துவக்கம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் உடன் போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... காதல் தோல்வியால் தீக்குளித்த கல்லூரி மாணவி!

x