ஐபிஎல் கிரிக்கெட்; குஜராத்துக்கு 207 ரன்கள் இலக்கு... இரண்டாவது வெற்றியை நோக்கி சிஎஸ்கே!


சென்னை - குஜராத் அணி கேப்டன்கள்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 207 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

சிஎஸ்கே அணி

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ அணியும் மோதின. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. இந்நிலையில், இரண்டாவது ஆட்டம், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு டாஸ் விழுந்தது.

அப்போது சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். உடனே ருதுராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால், திடீரென சுதாரித்து கொண்டு முதலில் பந்து வீசுவதாக மாற்றி அறிவித்தார் கில். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்களை குவித்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 46 ரன்கள், ஷிவம் துபே 51ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்கள் உள்ளிட்டோரின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி இமாலய ரன்னை எடுத்துள்ளது. இதையடுத்து 207 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி தற்போது ஆடி வருகிறது.

x