விருதுநகரில் அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்!


விளையாட்டுப் போட்டி

விருதுநகர்: முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் அரசு பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் விருதுநகரில் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2024-ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10-ம் தேதி விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் தொடங்கியது. முதல் நாளில் பள்ளி மாணவ- மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அரசு பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. ஆண்களுக்கு 100 மீட்டர், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டிகளும், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளும், பெண்களுக்கு 100 மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப் போட்டிகளும், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளும் நடைபெற்றன.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் கபடி, பேட்மிண்டன், கேரம் போட்டிகளும் தனித்தனியே நடைபெற்றன. இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கிவைத்தார். 100-க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் ஆர்வமுடன் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

x