காவல் நிலையத்திற்கு அலறியடித்து ஓடிய தினேஷ் கார்த்திக்! வீட்டின் சொத்து ஆவணம் குறித்து புகார்!


கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டில் சொத்து ஆவணங்கள் மாயமாகியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் (36) சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது வீட்டில் இருந்த சொத்து ஆவணங்களை ஜெராக்ஸ் எடுப்பதற்கு கொண்டு சென்ற போது காணாமல் போனதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீடு

பின்னர் தினேஷ் கார்த்திக் எங்கு தேடியும் ஆவணங்கள் கிடைக்காததால் நேற்று இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரபல நடிகர் ராம்கி தனது வீட்டு சொத்து ஆவணங்கள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x