அமெரிக்காவில் டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாடிய ’தல’ தோனி! வைரலாகும் வீடியோ!


டிரம்ப் உடன் தோனி

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்புடன் கோல்ஃப் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தோனியை ​கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார்.

டொனால்டு டிரம்ப்பின் அழைப்பை ஏற்று தோனி அவரை சந்தித்து கோல்ஃப் விளையாடியுள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டன் தோனியுடன் டொனால்டு டிரம்ப் கோல்ஃப் விளையாடும் வீடியோவை ‘தல’ தோனியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

x