பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!


குயிண்ட்டன் டிகாக்

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அந்த அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் குயிண்ட்டன் டிகாக் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்த மூத்த வீரர்கள் பலரும் அடுத்தடுத்து ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது அந்த அணியின் பேட்டிங் நம்பிக்கையாக குயிண்ட்டன் டிகாக் விளங்கி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த டிகாக் தற்போது ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். இந்த தொடருக்குப் பிறகு அவர் ஒருநாள் தொடரில் இருந்தும் ஒய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க வேண்டியிருப்பதால்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரரான இவர் இவ்வளவு குறைந்த வயதில் ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

x