உலகக்கோப்பை கிரிக்கெட்! இந்திய அணி அறிவிப்பு... ரோகித் சர்மா கேப்டன்!


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இந்தநிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்திய அணி

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிவில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில், கே.எல்.ராகுல், விராட் கோலி, இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார், ரவீந்திர ஜடேஜா, அக் ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியில் 5 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 4 ஆல்ரவுண்டர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

x