அண்ணா பல்கலைக்கழக மண்டல வாலிபால் போட்டி தொடக்கம்


அண்ணா பல்கலைக்கழக மண்டலம் வாலிபால் போட்டி கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரி தொடங்கியது. போட்டியை கல்லூரியின் முதல்வர் முகமது ஜுனைத் தொடங்கி வைத்தார்.

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மண்டலம்-1 ஆடவருக்கான வாலிபால் போட்டி கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி நேற்று தொடங்கியது. போட்டியை கல்லூரியின் முதல்வர் முகமது ஜுனைத் தொடங்கி வைத்தார். போட்டியின் அமைப்பாளர் மகேஷ், ஒருங்கிணைப்பாளர் ஜோதி ஸ்வரூபன், மண்டலம்-1 விளையாட்டு செயலாளர் ரமேஷ் கன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல் நாளில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி அணி 25-11,25-20 என்ற செட் கணக்கில் ஜெயா பொறியியல் கல்லூரியை தோற்கடித்தது. ஆர்எம்டி பொறியியல் கல்லூரி 25-18, 20-25, 27-25 என்ற செட் கணக்கில் எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தியது.

x