பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்த மத்திய அமைச்சர்... நெகிழவைத்த வாழ்த்து!


பிரக்ஞானந்தா

சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தாவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

பிரக்ஞானந்தாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,"நான் அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறார். 16 வயதிலேயே மற்றவர்களால் செய்ய முடியாததை அவர் செய்து காட்டியிருக்கிறார். பல்வேறு இளைஞர்கள் இவரை பார்த்து செஸ் விளையாட ஆர்வம் பெறுவர்" என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பிரக்ஞானந்தாவின் பெற்றோரும் உடனிருந்தனர்.

முன்னதாக பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இதுதவிர தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

x