2023ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் கலந்து கொள்கின்றன. 6 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த தொடர் நடைபெறுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் ஒரு முறை மோதும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் குரூப் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இன்று நடைபெறும் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் உள்ள பாகிஸ்தான் - நேபாள் அணிகள் மோதுகின்றன. முல்தான் நகரில் நடைபெறும் இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.