நாளை ஆசிய கோப்பை கிரிக்கெட்... கே.எல் ராகுல் பங்கேற்க மாட்டார்! ரசிகர்கள் அதிர்ச்சி!


கே .எல் ராகுல், ராகுல் டிராவிட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால், அணியின் பலம் கூடியுள்ளது.

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் முதல் இரண்டு போட்டிகளில் கே .எல் ராகுல் பங்கேற்க மாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடனும், இரண்டாவது போட்டியில் நேபாள் அணிக்கு எதிராகவும் விளையாடுகிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ராகுல் இன்னும் முழு உடல் தகுதி பெறாத நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

x