காலில் விழுந்த ரசிகை... தோனியின் நெகிழ வைத்த ரியாக்‌ஷன்!


தோனி

தனது காலில் விழுந்த பெண் ரசிகையை தடுத்து நிறுத்தி, அவருக்கு கை கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வாகை சூடியவர் மகேந்திர சிங். இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐபிஎல் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த ஆண்டு அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து வரும் 2024ம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பதாக அறிவித்து, அதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார்.

கிரிக்கெட் தவிர சினிமா தயாரிப்பு உட்பட தொழில்களிலும் கவனம் செலுத்தி வரும் தோனி, தனது ஓய்வு நேரத்தில் கார் மற்றும் பைக்கில் வலம் வருவதும், ஜிம்மில் ஒர்க்கவுட் செய்வதுமாக இருக்கிறார். இந்நிலையில், தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தோனி, தனது காலில் விழும் பெண் ரசிகையை தடுத்து நிறுத்தி அவருக்கு கை கொடுத்து, அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை தோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

x