செங்கல்பட்டில் கட்டப்படவுள்ள விளையாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
செங்கல்பட்டு பகுதியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு அரங்கம் அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் நீச்சல் வீரர் தனுஷ் மற்றும் பேரா வீல்சேர் வீராங்கனை சங்கீதா ஆகியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
பின்னர் பேசிய உதியநிதி ஸ்டாலின்,” கேலோ விளையாட்டில் 98 பதக்கங்களை தமிழகம் பெற்று அசத்தியுள்ளது. காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகளவிலான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர். மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 86 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மதுரை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 1,271 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,”இனி தமிழகம் விளையாடுத்துறையில் சிறந்து விளங்கும். பல்வேறு பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து இனி ஏராளமானோர் பங்கேற்பார்கள். விளையாட்டு துறையின் வளர்ச்சி நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் சென்ற சேர தமிழ்நாட்டின் விளையாட்டு துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன” என்றும் கூறினார். முன்னதாக அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையும் வாசிக்கலாமே..
அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்... அலர்ட்டான ரஜினிகாந்த்!