அச்சச்சோ...விராட் கோலி மூக்கில் பிளாஸ்திரி, முகத்தில் காயம்!


விராட் கோலி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முகத்தில் பிளாஸ்திரி மற்றும் சிறு காயங்களுடன் பதிவிட்டிருக்கும் புகைப்படம் அவருக்கு என்ன ஆச்சோ என்ற பதற்றத்தை அவரது ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்காக வழக்கம் போல் கடுமையாக போராடிய விராட் கோலிக்கு கோப்பையை தவறவிட்டது ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும்.

இந்த உலகக் கோப்பையில் 11 போட்டிகளில் மொத்தம் 765 ரன்களை குவித்து, தொடர் நாயகன் விருதை வென்றார் விராட் கோலி (Virat Kohli).

இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை (Virat Kohli Instagram Story) நேற்று பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை முதலில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர் எனலாம். மூக்கில் பிளாஸ்திரி, கண், முகத்தில் சிறு சிறு காயங்களுடன் விராட் கோலி அந்த புகைப்படத்தில் காணப்பட்டார்.

இருப்பினும், அதில் வெள்ளை நிற டீ-ஷர்டில் இரு விரல்களைக் காண்பித்து அவரின் டிரேட்மார்க் சிரிப்புடனே விராட் காணப்பட்டார். எனவே, இந்த புகைப்படம் உண்மையா, போலியா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்தது. மேலும், விராட் அந்த ஸ்டோரியில் புகைப்படத்தின் கீழ் பகுதியில், "நீங்கள் அந்த இன்னொரு நபரையும் பார்த்தாக வேண்டும்" (You should see the other guy) என குறிப்பிட்டிருந்தார்.

அவரின் அடுத்த ஸ்டோரியைப் பார்த்தபோதுதான், இது அவர் விளம்பரத் தூதராக இருக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பர யுக்தி என தெரியவந்தது. அந்த நிறுவனத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தள்ளுபடி விற்பனை சார்ந்து இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், இதுசார்ந்த மற்றொரு விளம்பரத்தில் ஒரே மாதிரியான ஆடையை அணிந்து விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகியோரின் வீடியோவும் அவர் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.

எனவே, விராட் கோலிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை, அது வெறும் விளம்பர யுக்திதான் என்பது உறுதியானது. ஆனால், ரசிகர்கள் அதற்குள் தங்கள் 'தலைவனுக்கு' என்ன ஆகிவிட்டது என்ற பதறி இணையத்தில் பதிவிட்டு வந்தனர். பின்னர் அவர்களுக்கு அதன் உண்மை பின்னணி தெரியவந்ததும் நிம்மதி அடைந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x