டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீராம் பாலாஜி


ஸ்டாக்ஹோம்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப் 1 மோதலில் இந்தியா - சுவீடன் அணிகள் இடையிலான ஆட்டம் இன்று தொடங்குகிறது. இந்த மோதல் இன்றும், நாளையும் (15-ம் தேதி) சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுவீடனின் லியோ போர்க்குடன் மோதுகிறார். லியோ போர்க், டென்னிஸ் ஜாம்பவான் ஜான் போர்க்கின் மகன் ஆவார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி, சுவீடனின் எலியாஸூடன் பலப்பரீட்சை நடத்துகிறார். ஸ்ரீராம் பாலாஜி இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடக்கூடியவர். இருப்பினும் அவரை ஒற்றையர் பிரிவில் களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2-ம் நாளில்மாற்று ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெறுகின்றன

x