கட்டியணைத்து உதட்டில் முத்தம்... வலுக்கும் எதிர்ப்பு! மன்னிப்புக் கேட்டார் சங்கத் தலைவர்!


வீராங்கனையை முத்தமிட்ட கால்பந்து சங்கத் தலைவர்

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீராங்கனைக்கு அந்நாட்டு கால்பந்து சங்க தலைவர் கட்டிணையத்து முத்தம் கொடுத்தது சர்ச்சையான நிலையில், தற்போது தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 9-வது பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து இணைந்து நடத்தின. இந்த கால்பந்து திருவிழா கடந்த மாதம் 20-ம் தேதி (ஜூலை) தொடங்கி இன்று (ஆகஸ்ட் 20) வரை நடைபெற்றது. மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரீட்சை மேற்கொண்டன. 8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. மொத்தம் 64 போட்டிகள். இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஸ்பெயின் மற்றும் ‘டி’ பிரிவில் இடம் பெற்ற இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்தப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், பரிசளிப்பு விழாவின் போது வீராங்கனை ஜெனிஃபருக்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து சங்க தலைவர் ரூபியாலெஸ் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீராங்கனை ஜெனிஃபர் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பகிர்ந்து இருந்தார். இதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் கால்பந்து சங்க தலைவர் ரூபியாலெஸ் மன்னிப்புக் கோரினார். தான் செய்தது தவறு என்றும் வெற்றி கொண்டாட்டத்தில் அவ்வாறு நடந்து கொண்டேன் என்றும் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் ரூபியாலெஸ் தெரிவித்துள்ளார்.

x