ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கானுக்கு முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆப்கானிஸ்தான் அணி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.
அதில் அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கானின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. உலகக் கோப்பைத் தொடரைத் தொடர்ந்து அவர் பிக் பாஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதாக இருந்தது.
இந்த நிலையில், ரஷித் கானுக்கு திடீரென அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரஷித் கானுக்கு முதுகுப் பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு சிறிது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...