தென்காசி ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் அட்டவணை


தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 2024 - 25ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் 10.9.2024 முதல் 24.9.2024 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகள் 12 வயது முதல் 19 வரை பள்ளிப் பிரிவாகவும், 17 வயது முதல் 25 வரை கல்லுரிப் பிரிவாகவும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவாகவும் மற்றும் அரசு ஊழியர், மாற்றுத் திறனாளிகள் என 5 பிரிவாக நடைபெறுகிறது.

போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.3000, 2000 மற்றும் 1000 வீதம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். தனி நபர் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களும், குழுப் போட்டிகளில் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்யப்படும் சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

பள்ளிப் பிரிவினர் (ஆண்கள்)- தடகளம், சதுரங்கம் போட்டி 10ம் தேதியும், கேரம் 12ம் தேதியும், கால்பந்து போட்டி 15ம் தேதியும் தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது. இறகுப் பந்து போட்டி 11ம் தேதியும், சிலம்பம் 13ம் தேதியும், இலஞ்சி ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கூடைப் பந்து, டேபிள் டென்னிஸ், ஹாக்கி 13ம் தேதி இலத்துர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. வாலி பால் போட்டி 11ம் தேதி மடத்துர் இந்து நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

நீச்சல் போட்டி 13ம் தேதி செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் போட்டி 10ம் தேதி எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கோ கோ போட்டி 11ம் தேதி தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. கைப் பந்து போட்டி 11ம் தேதி ஜாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. கபடி போட்டி 11ம் தேதி சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

பள்ளிப்பிரிவினர் (பெண்கள்)- தடகளம், சதுரங்கம் போட்டி 10ம் தேதியும், கேரம் 12ம் தேதியும், கால்பந்து போட்டி 14ம் தேதியும் தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இறகுப் பந்து 11ம் தேதி, சிலம்பம் 13ம் தேதி இலஞ்சி ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கூடைப்பந்து 13ம் தேதி குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லுரியில் நடைபெற உள்ளது.

டேபிள் டென்னிஸ் மற்றும், ஹாக்கி 13ம் தேதி இலத்துர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. வாலி பால் போட்டி 11ம் தேதி மடத்துர் இந்து நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. நீச்சல் 13ம் தேதி செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் போட்டி 10ம் தேதி இசக்கி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கோ கோ போட்டி 11ம் தேதி தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. கைப் பந்து போட்டி 11ம் தேதி ஜாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. கபடி போட்டி 11ம் தேதி சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

கல்லுரிப் பிரிவினர் (ஆண்கள்) தடகளம் மற்றும் கேரம் போட்டியானது 13ம் தேதியும், சதுரங்கம் 11ம் தேதியும், கால்பந்து போட்டி 20ம் தேதியும் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இறகுப் பந்து 12ம் தேதியும், சிலம்பம் 14ம் தேதியும் இலஞ்சி ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கூடைப் பந்து, டேபிள் டென்னிஸ், ஹாக்கி 14ம் தேதி இலத்துர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது . 18ம் தேதி வாலி பால் போட்டியானது மடத்துர் இந்து நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

நீச்சல் போட்டி 13ம் தேதி செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் போட்டி 18ம் தேதி எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கைப் பந்து போட்டி 12ம் தேதி ஜாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது . கபடி 13ம் தேதி சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

கல்லுரி பிரிவினர் (பெண்கள்) தடகளம், கேரம் போட்டி 13ம் தேதியும், சதுரங்கம் 11ம் தேதியும் கால்பந்து போட்டி 21ம் தேதியும் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது . இறகுப் பந்து 12ம் தேதி குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லுரியில் நடைபெற உள்ளது. சிலம்பம் 14ம் தேதி இலஞ்சி ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கூடைப் பந்து 14ம் தேதி குற்றாலம் பராசக்தி கல்லுரியில் நடைபெற உள்ளது.

டேபிள் டென்னிஸ், ஹாக்கி போட்டி 14ம் தேதி இலத்துர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. வாலி பால் போட்டி 18ம் தேதி மடத்துர் இந்து நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. நீச்சல் போட்டி 13ம் தேதி செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் போட்டி 18ம் தேதி இசக்கி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. கைப் பந்து போட்டி 12ம் தேதி ஜாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. கபடி 13ம் தேதி சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

பள்ளி மற்றும் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான போட்டிகள்- பளு தூக்குதல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12ம் தேதியும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 13ம் தேதியும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. குத்துச் சண்டை போட்டி 14ம் தேதி பள்ளி மாணவ மாணவிகளுக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 15ம் தேதியும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

வாள் சண்டை போட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 14ம் தேதியும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 15ம் தேதியும் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறள்ளது. ஜூடோ போட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12ம் தேதியும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 13ம் தேதியும் திருநெல்வேலி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. டென்னிஸ் மற்றும் பீச் வாலி பால் போட்டி 13ம் தேதி தூத்துக்குடியில் பள்ளி மற்றும் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெறவுள்ளது.

போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரும் காலை 8 மணிக்கு விளையாட்டு போட்டி நடைபெறும் இடங்களில் வருகையை பதிவு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி பிரிவில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் போட்டி நடைபெறும் நாளன்று பள்ளி அடையாள அட்டை அல்லது போனபைடு சான்றிதழில் ஏதேனும் ஒன்றோ, வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகல் ஆகியவற்றை கட்டாயம் சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04633 212580, 7708330531, 7010797695, 7401703454 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியல் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

x