பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: உயரம் தாண்டுதலில் பிரவீன்குமார் முதலிடம்; இந்தியாவுக்கு 6-வது தங்கம்


பாரிஸ்: பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு 6-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

பாரிஸ் நகரில் நேற்று டி64 உயரம் தாண்டுதல் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் நொய்டாவைச் சேர்ந்த வீரர் பிரவீன் குமார் (21) பங்கேற்றார். அவர் 2.08 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த சீசனில் அவர் தாண்டிய அதிகபட்ச உயரமாக இது அமைந்தது. இதையடுத்து பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு 6-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

இவர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் அமெரிக்க வீரர் டெரக் லோக்கிடென்ட் வெள்ளியும் (2.06 மீட்டர்), உஸ்பெகிஸ்தானின் டெமுர்பெக் ஜியாசோவ் வெண்கலமும் (2.03 மீட்டர்) வென்றனர்.

x