ரஞ்சி கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் 78 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணியை சேர்ந்த துஷார், தனுஷ் இருவரும் புதிய சாதனையை படைத்துள்ளனர். அதாவது, 10வது, 11வதாக களமிறங்கி சதம் அடித்த இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்திய அளவில் முக்கியமான தொடர்களில் ஒன்றான ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது நடந்து நாக் அவுட் சுற்றுகளை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் காலிறுதிப் போட்டி ஒன்றில் பரோடா மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 384 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பரோடா அணி 348 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை மும்பை இந்தியன்ஸ் அணி பேட் செய்த போது 569 ரன்கள் சேர்த்தது. இதில், 10, 11வது இடத்தில் வந்த துஷார் தேஷ்பாண்டே, தனுஷ் கோட்யான் ஆகியோர் இன்னிங்ஸை சிறப்பாக கையாண்டு இருவரும் சதம் அடித்தனர். இவர்கள் மும்பையின் ஸ்கோரை 569 ரன்களுக்கு கொண்டு சென்றனர்.
78 ஆண்டுகால முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 10வது மற்றும் 11வது பேட்டர் இருவரும் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய சாதனை படைத்த இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தனுஷ் 120 ரன்களுடன் களத்தில் நின்றிருந்தார். தேஷ்பாண்டே 123 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். இதன் மூலம் பரோடா அணிக்கு 606 ரன்கள் இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. இன்று கடைசி நாள் என்பதால் மும்பை அணியே வெற்றி பெரும் நிலையில் உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் பாலிவுட் இயக்குநர்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரத்த வெள்ளத்தில் போலீஸ்காரர்... ‘எதிர்நீச்சல்’ நடிகை மதுமிதா கைது?!