உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: நடைபெறும் இடம், தேதியை அறிவித்தது ஐசிசி!


சென்னை: அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 11 முதல் 15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த முதல் டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. 2023-ம் ஆண்டு நடந்த 2வது உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதையடுத்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 3வது சீசன் (2023-2025) நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 9 அணிகள் கலந்து கொண்டுள்ளன. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில், முதல் 2 இடங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. இறுதிப் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு வருட சுழற்சியில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

இந்நிலையில், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. 2025ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16ம் தேதி போட்டியின் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

x