பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல இதுதான் வாய்ப்பு... வாசிம் அக்ரம் கிண்டல்!


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்கு பாகிஸ்தான் அணி நுழைய இரண்டே வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அப்படி நடந்தால், அரையிறுதியில் அந்த அணி இந்தியாவை எதிர்கொள்ளும்.

இதற்கிடையே, ஒட்டு மொத்த இங்கிலாந்து அணியை டிரஸ்ஸிங் ரூமுக்குள் அடைத்து பாகிஸ்தான் அணி பூட்டி விட்டு, 'டைம் அவுட்'' முறையில் இங்கிலாந்து அணியை அவுட் ஆக்கிவிடலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் பவுலர் வாசிம் அக்ரம் கிண்டல் அடித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் நியூசிலாந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, புள்ளிகள் பட்டியலில் 5 வெற்றி மற்றும் 10 புள்ளிகளுடன் 0.74 ரன் ரேட்டில் நியூசிலாந்து 4வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

முதலில், இங்கிலாந்து அணியை 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் 400 ரன் எடுக்க வேண்டும், அடுத்து பேட்டிங் செய்யும் இங்கிலாந்து அணியை 112 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற வேண்டும். இரண்டாவதாக, இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை 2.4 ஓவர்களுக்குள், அதாவது 16 பந்துகளில் இலக்கை எட்ட வேண்டும். இப்படி இமாலய இலக்கை எட்டினால் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை மீண்டும் சந்திக்கலாம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இதனால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மங்கி வருவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இது நடக்குமா, நடக்காதா என்பது நாளை கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் முடிவு தெரிந்துவிடும். புள்ளிப்பட்டியலில் நான்காம் இடம் பிடிக்கும் அணி, மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த சூழலில்தான், ஒட்டு மொத்த இங்கிலாந்து அணியை டிரஸ்ஸிங் ரூமுக்குள் அடைத்து பாகிஸ்தான் அணி பூட்டி விட்டு, 'டைம் அவுட்'' முறையில் இங்கிலாந்து அணியை அவுட் ஆக்கிவிடலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் பவுலர் வாசிம் அக்ரம் கிண்டல் அடித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x