பாரிஸ்: பாராலிம்பிக் போட்டியில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ. ஏர் ரைஃபில் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். மூன்றாவது இடத்தைப் பிடித்த மோனா அகர்வாலுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரம்மாண்டமாக ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 4,400 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இன்றைய போட்டியில் பாரா ஒலிம்பிக் 10 மீட்டர் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை அவனி லேக்காரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதேபோட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான அவனி லெகரா, இம்முறையும் தங்கம் வென்றுள்ளார்.
இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா 249.7 புள்ளிகளுடன் முதலிடமும், தென் கொரியாவின் லீ யுன்ரி 246.8 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 228.7 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பிடித்தனர்.