சிராஜின் வேகத்தில் சரிந்த இங்கிலாந்து விக்கெட்டுகள்... 3வது டெஸ்டில் இந்தியா அபாரம்!


முகமது சிராஜ்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜின் அபார பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருப்பதால் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி சவுராஷ்டிரா மைதானத்தில் கடந்த 15ம் தேதி துவங்கியது.

சதமடித்து அசத்திய பென் டக்கெட்

இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்தனர். அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் 62 ரன்களும், மற்றொரு அறிமுக வீரர் துருவ் ஜுரல் 46 ரன்கள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 153 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

2வது இன்னிங்ஸை துவக்கியுள்ள இந்திய அணி

இதனிடையே குல்தீவ் யாதவ் பந்தில் டக்கெட் ஆட்டமிழந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்கள் எடுத்தார். அவரும் ரவீந்திர ஜடேஜாவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார். இதையடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக வந்து வீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 126 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை இந்திய அணி துவக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

x